பல்கலைக்கழகத்தில் பன்மொழி
பங்கேற்பாளர்களுக்கு,
வணக்கம். பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் “பன்மொழியை” எவ்வாறு கையாள்கின்றனர் என்பதனை அறியவே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. தங்களின் அன்றாட வாழ்க்கையிலும் தங்களின் கற்றலிலும் பன்மொழி பயன்பாட்டின் பங்கினை அறிய விரும்புகிறோம். இந்த வினாப் பாரத்தைப் பூர்த்தி செய்ய 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். இதில் தங்களின் சுய விவரங்களைப் பகிரத் தேவை இல்லை. தங்களின் விவரங்கள் எங்கையும் எவ்வகையிலும் பகிரப்படா.
தங்களின் சுய விருப்பத்தின்பால் மட்டுமே இவ்வினா பாரத்தைப் பூர்த்தி செய்யவும். எவ்வகையிலும் கட்டாயமில்லை. அனைத்து தகவல்களும் இரகசியமாக சேகரிக்கப்பட்டு பகுப்பாயப்படும். இதற்குகாக பணத் தொகை ஏதும் வழங்கப்படாது. தங்களின் அடையாளத்தை மறைவாக வைத்துக் கொள்ள தங்களை அடையாளப்படுத்தும் எந்தத் தகவல்களும் கேட்கப்படாது. பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்ற தரவுகளுடன் சேர்க்காமல் பயன்படுத்தப்படும். சேகரிக்கப்பட்ட தகவல்களைத் தாங்கள் பெறவும் எந்த நேரத்திலும் இந்த ஆய்விலிருந்து விலக முழு உரிமையுண்டு. சேகரிக்கப்பட்டு செயலாக்கப்பட்டு சேமிக்கப்பட்டு அனுப்பப்படும் தரவுகள், ஐரோப்பாவில் தரவுப் பாதுகாப்பின் (GDPR) சட்ட விதிகளுக்கு உட்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள், அறிவியல் ஆராய்ச்சி, புள்ளிவிவரங்கள், பதிப்பக்கம், கற்பித்தல், பயிற்சி ஆகிய நோக்கங்களுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படும்.
தங்களின் பங்கேற்புக்கு மிக்க நன்றி.
Dr. Marco Triulzi, Ludwig-Maximilians-Universität München
Dr. Stefanie Bredthauer, Mercator-Institut für Sprachförderung und Deutsch als Zweitsprache, Universität zu Köln
Stefanie Helbert, Universiti Malaya